×

பேருந்து கவிழ்ந்து 27 மாணவர்கள் காயம்

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சேலம் மெயின்ரோட்டில் ரயில்வே கிராசிங் அருகில் தனியார் மெட்ரிக் மேல்நிலைபபள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் 40 மாணவர்களை வழக்கம்போல் நேற்று மாலை 5 மணியளவில் பள்ளி பேருந்தில் சமத்துவபுரம் வழியாக சென்றனர். வழியில் 13 மாணவர்களை இறக்கி விட்டுள்ளனர். மீதமுள்ள 27 மாணவர்களுடன் பேருந்து மூங்கில்பாடி நோக்கி சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி பேருந்து மக்காச்சோள வயலில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் 27 மாணவர்கள் காயமடைந்தனர்.

The post பேருந்து கவிழ்ந்து 27 மாணவர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : SINNSALAM ,KALLAKURICHI DISTRICT ,Dinakaran ,
× RELATED தீ விபத்தில் கூரை வீடு எரிந்து ₹3 லட்சம் சேதம்