×

ஐகோர்ட் வளாகத்தில் 15 கிரவுண்ட் நிலம் மின்வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்த விவரம் தாக்கல் செய்ய வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.டி.அருணன் தாக்கல் செய்த மனுவில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 15 கிரவுண்ட் நிலம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 1990ல் வழங்கப்பட்டது. ஆனால், ஒரு பகுதியில் மட்டும் மின்சார கட்டணம் வசூலிக்கும் மையம் செயல்படுகிறது. தற்போது உயர்நீதிமன்ற வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த முடியாத அளவுக்கு நெரிசல் நிலவுகிறது. எனவே, மின்சார வாரியத்துக்கு வழங்கப்பட்ட இடத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அந்த நிலம் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இந்த நிலம் ஒதுக்கீடு எப்போது செய்யப்பட்டது? எவ்வளவு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்ற விவரங்களையும், ஒதுக்கீட்டு உத்தரவு நகலையும் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 31க்கு தள்ளிவைத்தனர்.

The post ஐகோர்ட் வளாகத்தில் 15 கிரவுண்ட் நிலம் மின்வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்த விவரம் தாக்கல் செய்ய வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madras High Court ,M.D.Arunan ,Chennai High Court ,
× RELATED உயர்நீதிமன்ற வளாகத்தை தூய்மையாக...