×

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நியாய விலைக் கடைகளுக்கும் நாளை (டிச. 08) பணி நாளாக அறிவிப்பு

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் நாளை (டிச. 08) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகி, காற்றழத்த தாழ்வு மண்டலமாக மாறி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, பின்னர் மிக்ஜாம் புயலாக உருவானது.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்தது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் நாளை (டிச. 08) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “‘மிக்ஜாம்’புயல் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி, மேற்படி 4 மாவட்டங்களில் மட்டும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் 08.12.2023 (வெள்ளிக் கிழமை) அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நியாய விலைக் கடைகளுக்கும் நாளை (டிச. 08) பணி நாளாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,
× RELATED டிரைவர் தூக்கிட்டு தற்கொலை