×

வெள்ள நிவாரண நிதியாக தங்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்க உள்ளதாக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் உதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒரு நாள் ஊதியம் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று தலைவர் ஆபாஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள அழிவு மற்றும் இன்னல்களில் இருந்து தமிழக மக்களை காக்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மக்கள் சேவைக்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் எப்போதும் உறுதுணையாக இருந்து வருகிறது.

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பேரழிவைக் கருத்தில் கொண்டும், அரசின் முயற்சியில் கைகோர்க்கும் வகையில், தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம், தனது உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளத்தை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெள்ள நிவாரண நிதியாக தங்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்க உள்ளதாக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : IPS Officers Association ,Chennai ,Tamil Nadu ,Cyclone Mikjam ,IPS Officers' ,IPS Officers' Association ,Dinakaran ,
× RELATED அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி...