×

வெள்ளம் பாதித்த பகுதியில் பெயருக்கு பார்வையிட்டார்; அண்ணாமலையை ஓட விட்ட பொதுமக்கள்: பாதிக்கப்பட்ட பகுதிக்கு வராமல் பஸ் ஸ்டாண்டில் பார்த்ததால் ஆத்திரம்

சென்னை: வெள்ளம் பாதித்த பகுதியில் பெயரளவுக்கு அண்ணாமலை பார்வையிட்டதால், பாதிக்கப்பட்ட பெண் தன் வீட்டை வந்து பார்க்கும்படி கேட்டதால் பாதியிலேயே ஓட்டம் பிடித்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதாக கூறி நேற்று சில பகுதிகளுக்கு சென்றார்.

அவ்வாறு அவர் வடசென்னை பகுதியில் மக்களை சந்திப்பதற்காக ெதாண்டர்கள் கூட்டத்துடன் சென்றார். அப்போது ஒரு பெண்ணிடம் குறை கேட்பது போல கேட்டார். அப்போது அந்த பெண், ‘ஐயா 3 மணி நேரமாக காத்து கொண்டு இருக்கின்றோம்’ என்றார். அவரைப் பார்த்து முதலில் சாப்பிடுங்கள். சாப்பிடாமல் இருக்கிறீர்கள் என்று அண்ணாமலை சமாதானப்படுத்தினார்.

இங்கே எங்கள் தொண்டர்கள் எல்லாம் இருக்கிறார்கள். நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றார். ஆனால் அந்தப் பெண்ணோ, ‘சாப்பாடு எல்லாம் இருக்கட்டும். எதிரில் பாருங்கள் 350க்கும் அதிகமான வீடுகள் இருக்கிறது. அருகே உள்ள இடத்தில் 1500க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கே வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பாருங்கள் என்று அழைத்தார். ஆனால், அந்த இடத்தை பார்வையிடாமல் அந்த பெண்ணை தட்டி கழிப்பது போல அண்ணாமலை பேசினார்.

மேலும் அங்கிருந்த பாஜகவினர் பாரத் மாதா கீ ஜெ… என்று கோஷம் மட்டும் எழுப்பினர். அங்கிருந்த ஒரு சில பெண்களுக்கு மட்டும் உணவு ெகாடுக்க முயன்றனர். ஆனால் வீட்டுக்கு வந்து பார்த்தே ஆக வேண்டும் என்று கூறியதால், காரில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அப்போது அங்கு கூடியிருந்த இளைஞர்கள், இரவு எல்லாம் கொசுக் கடியிலும், குளிரிலும் கஷ்டப்படுகிறோம். உள்ளே வந்து பார்க்கவில்லை. பஸ் ஸ்டாண்டில் பார்த்து, போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் போடுவதற்காக வருகிறார்.

இதற்கு நாங்களா கிடைச்சோம். மத்திய அரசு கையில் இருக்கிறது. எவ்வளவு பணிகளை செய்திருக்கலாம். ஆனால் யாரும் வரவில்லை. 2 நாள் கழித்து இப்போது வந்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்து பார்த்து விட்டுச் செல்கிறார். இதனால்தான் நாங்கள் அவரை அனுமதிக்கவில்லை. கேள்வி கேட்டதால் ஓடி விட்டார். வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவது போல நாடகமாடிய அண்ணாமலையின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றிய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஆட்சியில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசிடம் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடுத்து கூறினால் உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கும். ஆனால், அண்ணாமலை பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடாமல் சினிமா ஷூட்டிங் போல ஸ்டண்ட் அடித்தது அங்கிருந்த மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

The post வெள்ளம் பாதித்த பகுதியில் பெயருக்கு பார்வையிட்டார்; அண்ணாமலையை ஓட விட்ட பொதுமக்கள்: பாதிக்கப்பட்ட பகுதிக்கு வராமல் பஸ் ஸ்டாண்டில் பார்த்ததால் ஆத்திரம் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Chennai ,Dinakaran ,
× RELATED தலைவர் பதவியில் இருந்து...