×

புரோ கபடி லீக் தொடர்: பெங்கால் வாரியர்ஸ் -ஜெய்ப்பூர் குஜராத்-பாட்னா இன்று மோதல்

அகமதாபாத்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 10வது புரோ கபடி லீ்க் தொடர் போட்டிகள் அகமதாபாத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 8வது லீக் போட்டியில் பாட்னா பாட்னா பைரேட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் மோதின. இதில் 50-28 என்ற புள்ளி கணக்கில் பாட்னா எளிதாக வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில், உ.பி.யோத்தா- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய உ.பி. முதல் பதியில் அரியானாவை 2 முறை ஆல்அவுட் செய்து 29-14 என முன்னிலை பெற்றது. 2வது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய உபி 57-27 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் பிரதீப் நர்வால் 12, சுரேந்தர் கில் 13 ரைடு புள்ளி எடுத்தனர். இன்று இரவு 8 மணிக்கு பெங்கால் வாரியர்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், இரவு 9 மணிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ்-பாட்னா பைரேட்ஸ் மோதுகின்றன.

The post புரோ கபடி லீக் தொடர்: பெங்கால் வாரியர்ஸ் -ஜெய்ப்பூர் குஜராத்-பாட்னா இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : Pro Kabaddi League Series ,Bengal Warriors ,Jaipur Gujarat ,Patna ,Ahmedabad ,10th ,Jaipur ,Gujarat ,Dinakaran ,
× RELATED புரோ கபடி லீக் தொடர்: அரையிறுதியில் இன்று புனே – பாட்னா மோதல்