×

பந்து வீச்சாளர்கள் அபாரம்; சுருண்டது வங்கம்; தடுமாறும் நியூசி

டாகா: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சிலெட்டில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்கம் 150ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. கூடவே தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் 2வது டெஸ்ட் ஆட்டம் டாகாவில் நேற்று தொடங்கிறது. முதல் டெஸ்ட்டில் இறங்கிய அதே வீரர்களுடன் வங்கம் களமிறங்க, நியூசி அணியில் ஈஷ் சோதிக்கு பதிலாக மிட்செல் சான்ட்னர் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற வங்கம் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களளிறங்கிய மஹமதுல் ஹசன், ஜாகிர் ஹசன் ஆகியோர். முதல் 10ஓவர் தாக்குப் பிடித்தனர். இருவரும் முறையே 14, 8ரன்னில் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு கேப்டன் நஜ்மல் ஷான்டோ 9, மொமினுல் 5 ஆகியோரும் அடுத்தடுத்து வெளியேற, முஷ்ஃபிகுர் 35, ஹோசைன் 31 ரன் எடுத்து ஸ்கோர் 100யை கடக்க உதவினர். அடுத்து வந்தவர்களும் நியூசி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்னில் வெளியேறினர். அதனால் வங்கம் முதல் இன்னிங்சில் 66.2ஓவருக்கு 172ரன்னுக்கு சுருண்டது. அபாரமாக பந்து வீசிய மிட்செல் சான்ட்னர், கிளென் பிலிப்ஸ் தலா 3, அஜாஸ் படேல் 2 விக்கெட் எடுத்தனர்.

அதனையடுத்து நியூசி உற்சாகமாக முதல் இன்னிங்சை விளையாடத் தொடங்கியது. ஆனால் அந்த உற்சாகத்தை வங்க பந்துவீச்சாளர்கள் அதிக நேரம் நீடிக்க விடவில்லை. டாம் லாதம் 4, டெவன் கான்வே 11, கேன் வில்லியம்சன்13, ஹென்றி நிகோலஸ் 1, டாம் பிளெண்டல் 0ரன்னில் வெளியேற்றினர். அதனால் நியூசி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 12.4ஓவரில் 5விக்கெட் இழப்புக்கு 55ரன் என்ற பரிதாபநிலையில் இருந்தது. நியூசியின் டாரியல் மிட்செல் 12, கிளென் பிலிப்ஸ் 5ரன்னுடன் களத்தில் உள்ளனர். வங்கம் தரப்பில் மெஹிதி ஹசன் 3, தய்ஜூல் இஸ்லாம் 2விக்கெட் அள்ளினர்.

இந்நிலையில் 2வது நாளான இன்று இன்னும் 5விக்கெட்கள் கைவசம் இருக்க 117ரன் பின்தங்கிய நிலையில் நியூசி முதல் இன்னிங்சை தொடர உள்ளது.

The post பந்து வீச்சாளர்கள் அபாரம்; சுருண்டது வங்கம்; தடுமாறும் நியூசி appeared first on Dinakaran.

Tags : Rolled Bengal ,Dhaka ,New Zealand ,Bangladesh ,Sylhet ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்தில் உணவகத்தில் ஏற்பட்ட தீ...