×

ஆலப்புழாவில் குடும்பத்தகராறில் பயங்கரம் 11 முறை கத்தியால் குத்தி பெண் கொடூர கொலை: முதியவர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே குடும்பத் தகராறில் மனைவியை 11 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த 68 வயதான முதியவர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள செங்கணூர் பகுதியை சேர்ந்தவர் சிவன்குட்டி (68). அவரது மனைவி ராதா (62). 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்றும் வழக்கம் போல் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சிவன்குட்டி வீட்டில் காய்கறி நறுக்க பயன்படுத்தும் கத்தியை எடுத்து மனைவி ராதாவை சரமாரியாக குத்தினார். வலி தாங்க முடியாமல் ராதா அலறி துடித்தார். அவரது சத்தத்ைத கேட்டு அந்த பகுதியினர் விரைந்து வந்து பார்த்தனர்.

ஆனால் ரத்த வெள்ளத்தில் ராதா இறந்து கிடந்தார். உடனடியாக அது குறித்து செங்கணூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் ராதாவின் உடலில் 11 கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவன் குட்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஆலப்புழாவில் குடும்பத்தகராறில் பயங்கரம் 11 முறை கத்தியால் குத்தி பெண் கொடூர கொலை: முதியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Alappuzha ,Thiruvananthapuram ,Alappuzha, Kerala ,
× RELATED கேரளாவின் ஆலப்புழாவில் அரசுப் பேருந்தில் தீ விபத்து..!!