×

கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக உத்தரவு

பெங்களூரு: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவருடைய மகள் சவுந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் என்ற அனிமேஷன் திரைப்படம் 2014ல் வெளியானது. இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய தயாரிப்பு பணிகளுக்காக பெங்களூருவைச் சேர்ந்த ஆட்பீரோ அட்வர்டைஸிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடமிருந்து அப்படத்தை தயாரித்த மீடியா ஒன் குளோபல் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான முரளி மனோகர் ரூ.10 கோடி கடன் பெற்றதாகவும், இதற்காக லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் கூறியபடி படவெளியீட்டு உரிமையை தங்களுக்கு வழங்காமல் வேறு ஒரு நிறுவனத்துக்கு வழங்கியதாகவும், வாங்கிய கடன் தொகையையும் முழுமையாக திருப்பித்தரவில்லை எனக்கூறி ஆட்பீரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அபிர்சந்த் நஹார், இதுதொடர்பாக லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு எதிராக கடந்த 2015-ல் பெங்களூரு மாநகர 6-வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, லதா ரஜினிகாந்த் வரும் 2024 ஜூலை 6ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தது.

The post கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Lata Rajinikanth ,Bengaluru ,Rajinikanth ,Soundarya ,
× RELATED சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல்...