×

இரவோடு இரவாக வெள்ளநீர் அகற்றம்: சென்னையில் விமான சேவை தொடங்கியது


சென்னை: அடையாறு ஆற்றில் கரைபுரண்டு ஓடிய நீர், நேற்று முன்தினம் காலை விமான நிலைய ஓடுபாதை பகுதிக்குள் புகுந்து, கடல் போல் காட்சியளித்தது. இதையடுத்து உடனடியாக, விமான நிலையத்தின் ஓடுபாதைகள் மூடப்பட்டன. இதனால் நேற்று முன்தினம் காலையில் இருந்து சென்னையில் இருந்து எந்த ஒரு விமானமும் புறப்படவும் இல்லை, வந்து தரையிறங்கவும் இல்லை.

விமான நிலைய பணியாளர்கள், பொறியாளர்கள், பல்வேறு பிரிவை சேர்ந்த சிறப்பு குழுவினர், இந்த தண்ணீரை வெளியேற்றி, ஓடுபாதைகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதனால், நேற்று காலை முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது. இதற்கு பயணிகள் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

The post இரவோடு இரவாக வெள்ளநீர் அகற்றம்: சென்னையில் விமான சேவை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Adiyaaru River ,Service ,Dinakaran ,
× RELATED பிரதமராக பதவியேற்ற பிறகு...