×

சென்னை, மும்பையில் ₹45 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

புதுடெல்லி: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் மும்பை மற்றும் சென்னையில் நடந்த சோதனை அடிப்படையில் ரூ 45 கோடி சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்க இயக்குனரகம்தெரிவித்துள்ளது. 2017ம் ஆண்டில் உலகளாவிய நிதி நிறுவனமான சாண்டரால் கையகப்படுத்தப்பட்ட கேட்வே ஆபிஸ் பார்க்ஸ் பிரைவேட் லிமிடெட் (முன்பு ஸ்ரீராம் ப்ராப்பர்டீஸ் அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட்) நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ராம்பிரசாத் ரெட்டி மீது ரூ.129 கோடியை முறைகேடாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக கேட்வே ஆபிஸ் பார்க்ஸ் பிரைவேட் லிமிடெட் அளித்த புகார் அடிப்படையில் ராம்பிரசாத் ரெட்டி மற்றும் சிலர் மீது சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த புகார்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து சென்னை, மும்பையில் 14 இடங்களில் கடந்த நவம்பர் 29 மற்றும் 30ம் தேதி சோதனை நடத்தியது.

இந்த சோதனைகள் அடிப்படையில் ராம்பிரசாத் ரெட்டி மற்றும் புக்ராஜ் ஜெயின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சேலம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சப்ளையர்ஸ் பிரைவேட் லிமிடெட், போர் ஸ்டார் எஸ்டேட்ஸ் எல்எல்பி, ராஜேஷ் என்ற சரவணன் ஜீவானந்தம் கட்டுப்பாட்டில் உள்ள ஜேகேஎஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், சுயம்பு ப்ராஜெக்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் ரூ.45 கோடி சொத்துக்களை முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்து உள்ளது.

The post சென்னை, மும்பையில் ₹45 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : CHENNAI, MUMBAI ,New Delhi ,Mumbai ,Chennai ,Dinakaran ,
× RELATED கொலையான தந்தையின் கனவை நனவாக்கிய மகள்;...