×

தந்தை இறந்ததால் ரயில் முன் பாய்ந்து சிறுவன் தற்கொலை

திருப்பூர்: திருப்பூர் கேட் தோட்டம் பகுதியில் நள்ளிரவு 12 மணி அளவில் 17 வயது சிறுவன் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், சிறுவன் திருப்பூர் சர்க்கார் பெரியபாளையத்தை சேர்ந்த சங்கர்லால் (17) என்பதும், அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. சமீபத்தில் சங்கர்லாலின் தந்தை இறந்துவிட்டார். இதனால், மனம் உடைந்து காணப்பட்ட சிறுவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தந்தை இறந்ததால் ரயில் முன் பாய்ந்து சிறுவன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur Gate ,
× RELATED கடும் வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம்