×

புரோ கபடி லீக்: குஜராத் ஜெயன்ட்ஸ் 2வது வெற்றி


அகமதாபாத்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 10வது சீசன் புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் அகமதாபாத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 3வது லீக் போட்டியில் தமிழ்தலைவாஸ் 42-31 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில், குஜராத் ஜெயன்ட்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இதில் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு 20-14 என முன்னிலை பெற்றது. ஆனால் 2வது பாதியில் உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் குஜராத் பதிலடிகொடுத்து 20 புள்ளி எடுத்தது.

பெங்களூரால் 11 புள்ளிதான் எடுக்க முடிந்தது. முடிவில் 34-31 என குஜராத் த்ரில் வெற்றி பெற்றது. இன்று இரவு 8 மணிக்கு புனேரி பால்டன்-நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், இரவு 9 மணிக்கு பெங்களூரு புல்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் மோதுகின்றன.

The post புரோ கபடி லீக்: குஜராத் ஜெயன்ட்ஸ் 2வது வெற்றி appeared first on Dinakaran.

Tags : Pro Kabaddi League ,Gujarat Giants ,Ahmedabad ,Ahmedabad.… ,Dinakaran ,
× RELATED புரோ கபடி லீக் தொடர்: அரையிறுதியில் இன்று புனே – பாட்னா மோதல்