×

நாளை(05-12-2023) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைப்பு

சென்னை: நாளை(05-12-2023) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல் அறிவித்துள்ளார். தேர்வு நடத்தப்படும் எனவும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுவதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.

நேற்று தொலைதூர கல்வித்திட்டத்தின் கீழ் நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. அதேபோன்று இன்று நடைபெற இருந்த தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாளை(05-12-2023) நடைபெற இருந்த தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொலைதூர கல்வித்திட்டத்தின் கீழ் நடைபெற இருந்த தள்ளிவையாக்கப்பட்டுள்ளதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார். புதிய தேர்வு எப்போது மநடைபெறும் என்ற அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

The post நாளை(05-12-2023) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,Dinakaran ,
× RELATED TANCET, CEETA ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க...