×

மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்

நாமக்கல், டிச.4: கலைஞர் நூற்றாண்டையொட்டி, நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, நாமக்கல்லில் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடத்தப்படுகிறது. குரலிசை, கருவியிசை, பரத நாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில், நாமக்கல் மாவட்ட அளவிலான போட்டிகள் நேற்று நடந்தது. தனிநபராக அதிகபட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்த அனுமதி தரப்பட்டது.

இதில், மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்திருந்த 17 முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். சேலம் மண்டல கலை பண்பாட்டுத்துறை அலுவலக உதவியாளர் மணிகண்டன், சேலம் அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் ராமன், ஈரோடு அரசு இசைப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியர் கங்கா நாயுடு, ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் தில்லை சிவக்குமார் ஆகியோர் போட்டிகளை நடத்தினர்.

The post மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Artist Centenary ,Dinakaran ,
× RELATED தரமணியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறப்பு!!