×

இமாச்சல் கோயிலில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: 3 பேர் கைது

சிம்லா: இமாச்சலில் உனா மாவட்டத்தில் உள்ள சிந்த்பூர்ணி கோயில் சுவற்றில் ‘காலிஸ்தான் வாழ்க’, ‘இமாச்சலை காலிஸ்தானாக உருவாக்குவோம்’ என்ற காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் கடந்த 27ம் தேதி எழுதப்பட்டது. இது தொடர்பாக பூல் சந்த், அர்ஜிந்தர் சிங் மற்றும் ஹாரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மூன்று பேரும் சிந்த்பூர்ணி காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவரது வங்கி கணக்கிற்கு வெளிநாட்டில் இருந்து ₹25,000 பணம் அனுப்பப்பட்டதாகவும் வேலையை முடித்தவுடன் மீதி பணம் ₹25,000 தருவதாகவும் கூறப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post இமாச்சல் கோயிலில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Pro- ,Khalistan ,Himachal ,Shimla ,Himachal Khalistan ,Sindhpurni ,Una district ,
× RELATED புரோ கபடி தொடர்; லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவு