×

பெண்ணிடம் 4 பவுன் பறித்த இருவர் கைது

தூத்துக்குடி, டிச.3: தூத்துக்குடி சத்யாநகர், சுந்தரவேல்புரம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரும், இவரது மனைவி நாகஜோதி (29) என்பவரும் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி சேதுபதி சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். மாதாநகர் சந்திப்பு அருகே சென்றபோது இவர்களை நோட்டமிட்டு மற்றொரு பைக்கில் வந்த வாலிபர்கள் இருவர், நாகஜோதி அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துச் சென்றனர். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் இதில் ஈடுபட்ட தூத்துக்குடி திருவள்ளுவர்நகர், லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த நாகூர்அனிபா மகன் பின்லேடன் (22) மற்றும் தூத்துக்குடி மேட்டுப்பட்டி சந்தியா மகன் அர்னால்டு (23) ஆகிய இருவரையும் கைது செய்து நகையை மீட்டார். மேலும் கைதான இருவரிடமிருந்து பைக் மற்றும் செல்போன்களை மீட்டார்.

The post பெண்ணிடம் 4 பவுன் பறித்த இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Karuppasamy ,Sundavelpuram West, Satyanagar, Thoothukudi ,Nagajyoti ,
× RELATED வல்லநாடு ஊராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு பணி தீவிரம்