×

காவல்துறையின் பழைய வாகனங்கள் 7ம் தேதி பொதுஏலம்

தஞ்சாவூர், டிச.3: தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் முதிரா மற்றும் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை வருகிற 7ம் தேதி பொதுஏலம் விட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் தெரிவித்துள்ளார். பொது ஏலம் 7.12.2023 அன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம் கோர்ட் ரோடு, பழைய ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலத்திற்குண்டான காவல் வாகனங்கள் மேற்படி பழைய ஆயுதப்படை மைதானத்தில் முன்னதாக 6.12.2023, அன்று காலை 9 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை வாகனங்கள் பார்வைக்காக வைக்கப்படும்.

ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் 7-12-2023 அன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை ரூ.1,000 செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், ஏலம் எடுத்தவர்கள், ஏலத்தொகையுடன் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஏலத்தொகை மற்றும் GST ( இருசக்கர வாகனம்-12%, நான்கு சக்கர வாகனம் 18%) வரியுடன் சேர்த்து 7.12.2023 அன்று உடனே செலுத்திவிட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post காவல்துறையின் பழைய வாகனங்கள் 7ம் தேதி பொதுஏலம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur District Police ,Dinakaran ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...