×

மயிலாடுதுறை மாவட்டத்தில் உலக வாசக்டமி இருவார விழா

மயிலாடுதுறை,டிச.3: மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக்கொண்டு இதுவரை நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் ஏராளமான தாய்மார்கள் உள்ளனர். சில தாய்மார்களுக்கு குடும்பநல அறுவை சிகிச்சை ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உடல்நல பிரச்சனைகள் இருக்கும். ஆனால் 49 வயது வரை குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. இதனால் மருத்துவ சிக்கல்கள் ஏற்பட்டு பிரசவத்தின்போது உயிரிழக்கும் ஆயத்து உண்டு.

இதற்கு கணவர் கருத்தடை சிகிச்சை (வாசக்டமி) ஏற்றுகொள்வது மட்டுமே சரியான தீர்வாகும். திருமணமான ஆண்களிடையே கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு ஊக்கதொகையாக ரூ.1100 (ரூபாய் ஆயிரத்து நூறு மட்டும்) வழங்குகிறது. மாவட்ட கலெக்டர் தன்விருப்ப நிதியில் இருந்து ரூ.3900 வழங்கப்படுகிறது. எனவே மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அரசு ஆண் கருத்தடை சிகிச்சை செய்துக்கொள்ளும் பயனாளிகளுக்கு ரூ.5000 வழங்கப்படுகிறது.

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி இதுரை குடும்பநல அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளாத தம்பதிகள் எளிய ஆண் கருத்தடை சிகிச்சை செய்து மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு மற்றும் சிசு இறப்பு விகிதத்தை குறைத்திட உதவுமாறு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார்.

The post மயிலாடுதுறை மாவட்டத்தில் உலக வாசக்டமி இருவார விழா appeared first on Dinakaran.

Tags : World Vashaktami fortnight festival ,Mayiladuthurai district ,Mayiladuthurai ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை