×

எல்லை பாதுகாப்பு படைக்கு ராணுவத்தை போன்று சலுகைகள் வழங்க வேண்டும்

 

நாகர்கோவில், டிச.3: எல்லை பாதுகாப்பு படை மாநில பொதுசெயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1965ம் ஆண்டு இந்திய எல்லை பாதுகாப்பு படை ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்டது. அதனை அடிப்படையாக கொண்டு திருவனந்தபுரம் எல்லை பாதுகாப்பு படை துணை தலைமையக கமாண்டன்ட் பிரதீப் சர்மா தலைமையில் முன்னாள், இந்நாள் வீரர்கள் பங்கேற்ற 59 வது எழுச்சி தினம் முட்டத்துறை தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது.

இந்தநிலையில் எல்லை பாதுகாப்பு படைக்கு ராணுவத்தை போன்று அனைத்து சலுகைகளும் 2012ம் ஆண்டு ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து பல கோணங்களிலும் தமிழகம் உட்பட அனைத்து மாநில அரசுக்கும் 11 வருடங்களாக தொடர்ந்து பலமுறை கடிதம் எழுதியுள்ளோம். பல உதாரணங்களுடன் பல மாநில தலைமையகத்தில் அமைச்சர் மற்றும் தலைமை செயலாளர்களை நேரடியாக பலமுறை தொடர்பு கொண்டும் இதுவரைக்கும் எந்த பலனும் இல்லை.

இதனை ஒன்றிய அரசிடம் கேட்டால் ஏற்கனவே பிஎஸ்எப் உட்பட துணை ராணுவ படைக்கும் சலுகைகள் வழங்க 2012ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளதை மேற்கோள் காட்டி மாநில அரசை அணுகி சலுகைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்று ஒன்றிய அரசால் பதில் தரப்பட்டு வருகிறது. இதனால் வீரர்களின் குடும்பங்கள் மிக ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post எல்லை பாதுகாப்பு படைக்கு ராணுவத்தை போன்று சலுகைகள் வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Border Security Force ,Nagercoil ,Balakrishnan ,State General Secretary ,India ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை