சென்னை: நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் பிரதமர் மோடி படத்துடன் செல்பி பாய்ண்ட் அமைக்க வேண்டும் என்று கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யுசிஜி கடிதம் அனுப்பியுள்ள விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் அனைவரும் சாதி, மதம், அரசியல் கட்சிகளை கடந்து சகோதரத்துவத்துடன் கல்வி பயின்று வருகின்றனர்.
பல்வேறு தரப்பினர் படித்து வரும் கல்லூரிகளில் பிரதமர் மோடியை மாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரி வளாகத்தில் பிரதமர் மோடியின் முழு உருவப்படத்துடன் கூடிய செல்பி பாய்ண்ட்டுகளை ஆங்காங்கே அமைக்க வேண்டும் என்று கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுசிஜி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதற்கிடையில் யுசிஜி தரப்பில் பல்வேறு துறைகளில் இந்தியா சாதித்துள்ளதை விளக்கும் வகையில்தான் இதுபோன்று அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும், மாணவர்கள் படிக்கும் கல்லூரி வளாகத்தில் எப்படி இதுபோன்று அமைக்க முடியும். 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தான் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பொதுமக்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
The post நாடு முழுவதும் அமைக்க உத்தரவு பிரதமர் மோடி படத்துடன் கல்லூரிகளில் செல்பி பாய்ண்ட்: பல்கலை, கல்லூரிகளுக்கு யுசிஜி கடிதம் appeared first on Dinakaran.
