×

ஆள்மாறாட்ட முறைகேடு 50 திகார் சிறை ஊழியர்களுக்கு பணி நீக்க நோட்டீஸ்

புதுடெல்லி: டெல்லியில் திகார் சிறையில் பணியாற்றும் 50ஊழியர்களுக்கு சிறை நிர்வாகம் பணி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. துணை சேவைகள் தேர்வு வாரியத்தின் மூலமாக 39 காவலர்கள், 9 உதவி கண்காணிப்பாளர்கள் மற்றும் இரண்டு தலைமை செவிலி ஆகிய பதவிகளுக்காக மொத்தம் 450 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 50 பேருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இவர்களது பயோமெட்ரிக் விவரங்கள் நிர்வாக தரவுகளோடு பொருந்தவில்லை என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாரியம் நடத்திய தேர்வில் ஆள் மாறாட்ட முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள ஊழியர்கள் ஒரு மாதத்தில் பதிலளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post ஆள்மாறாட்ட முறைகேடு 50 திகார் சிறை ஊழியர்களுக்கு பணி நீக்க நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Tihar Jail ,New Delhi ,Delhi ,Dinakaran ,
× RELATED ஸ்டேபிள் பருத்தி இறக்குமதி வரி முழு விலக்கு: ஒன்றிய அரசு அறிவிப்பு