×

தந்தையை காப்பாற்ற முயன்ற போது கரும்பு தோட்டத்தில் 16 வயது மகள் வெட்டிக் கொலை: பீகாரில் பயங்கரம்

பாட்னா: பீகாரில் தந்தையை காப்பாற்ற முயன்ற போது மகளை ஒரு கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் கல்யாண்பூர் அடுத்த ஷம்புச்சக் பகுதியை சேர்ந்த ராம்தர்ஷன் கிரி என்பவர், தனது கரும்பு தோட்டத்தில் கூலித் தொழிலாளர்களுடன் சேர்ந்து வயல்களில் கரும்புகளை வெட்டி கொண்டிருந்தார்.

அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கரும்பு தோட்டத்திற்கு வந்தனர். அவர்கள் ராம்தர்ஷன் கிரியை திடீரென சரமாரியாக தாக்கினர். இதற்கிடையில், ராம்தர்ஷனின் 16 வயது மகளான குஷ்பு குமாரி தனது தந்தையை காப்பாற்றுவதற்காக அந்த கும்பலிடம் போராடினார். அந்த கும்பலை சேர்ந்த ஒருவர், அந்த சிறுமியை அரிவாளால் வெட்டினார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுமி அடுத்த சில நிமிடங்களில் கரும்பு தோட்டத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறிது நேரத்தில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் திரண்டனர். மக்களைக் கண்டதும், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் டிஎஸ்பி சத்யேந்திர குமார் சிங் கூறுகையில், ‘இரு தரப்பினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

சம்பவ நாளில் சிறுமி குஷ்பு குமாரியின் தலையில் அரிவாளால் சரமாரியாக ெவட்டியதால், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சிறுமி தனது தந்தையை காப்பாற்ற முயன்ற போது கொலை நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண் உட்பட இருவரை கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் புகார் வந்தவுடன் மற்றவர்களும் கைது செய்யப்படுவார்கள்’ என்றார்.

The post தந்தையை காப்பாற்ற முயன்ற போது கரும்பு தோட்டத்தில் 16 வயது மகள் வெட்டிக் கொலை: பீகாரில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Bihar ,Patna ,
× RELATED பீகாரில் சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு