×

புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்: காவல்துறை அறிவுறுத்தல்

சென்னை: புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை யாரும் வெளியே வர வேண்டாம் என சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர். புயல் தொடர்பாக பரவும் வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். கடல் அலை அதிகரிப்பு காரணமாக யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவித்துள்ளனர்.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ‘மிக்ஜம்’ புயல் டிச. 5-ஆம் தேதி முற்பகல் ஆந்திர மாநிலம் நெல்லூா் -மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. mஇதன் காரணமாக மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புயல் நேரத்தில் மக்கள் செய்துகொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்ற அறிவுறுத்தல்களை தமிழக அரசு வெளியிட்டிருந்தது.

எச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறையினரும் வெளியிட்டிருக்கிறார்கள். அதன்படி, சென்னையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். மிக்ஜம் புயல் கரையைக் கடந்துவிட்டது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, தேவையின்றி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று வெளியிடப்பட்டுள்ளது.வெளியே வர வேண்டிய அவசியம் ஏற்படின், பொதுப் போக்குவரத்து அல்லது நம்பகமான வாகனங்களில் மட்டும் பயணிக்கவும்.

இடி, புயலின்போது மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம். மின்கம்பங்கள் அருகில் நிற்க வேண்டாம். பொதுமக்கள் வாகனங்களை மெதுவாக இயக்கவும். வாகனங்களில் பிரேக்குகளை சரிபார்த்துக் கொள்ளவும். அவசர உதவி தேவைப்பட்டால் 100 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

 

The post புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்: காவல்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக...