×

கள்ளிக்குடி- காரியாபட்டி சாலை மோசம்: புதுப்பிக்க கோரிக்கை

 

கள்ளிக்குடி, டிச. 2: கள்ளிக்குடியில் இருந்து காரியாபட்டிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக கிடப்பதால் வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை புதுப்பித்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருமங்கலம் அருகே கள்ளிக்குடியில் இருந்து மேலப்பட்டி, ஓடைப்பட்டி, சென்னம்பட்டி, குராயூர், மொச்சிகுளம் வழியாக காரியாபட்டிக்கு சாலை செல்கிறது. தற்போது இச்சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக மழை பெய்யும் நேரத்தில் இச்சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்ேபால் தேங்கி கிடக்கிறது.

இதனால் ரயில்வே சுரங்கப்பாதை சாலை முழுவதும் அரிப்பு ஏற்பட்டு கற்கள் மட்டும் உள்ள சாலையாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாவதுடன் வானங்களும் அடிக்கடி பழுதாகி விடுகின்றன. மேலும் இச்சாலையில் அரசு பஸ்கள் செல்ல முடியாமல் பேய்குளம், உன்னிபட்டி, ஆவல்சூரம்பட்டி வழியாக மாற்றுப்பாதையில் செல்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள்ளிக்குடி- காரியாபட்டி சாலையினை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கள்ளிக்குடி- காரியாபட்டி சாலை மோசம்: புதுப்பிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kallikudi-Kariapatti ,Kallikudi ,Kariyapatti ,Kallikudi- ,Dinakaran ,
× RELATED பேருந்து நிறுத்தங்களில் தற்காலிக...