தென்காசி, டிச.2: தென்காசி நகராட்சி தலைவர் சாதிர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 46வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (2ம் தேதி) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு பதிவு முகாம் நடக்கிறது. இதுவரை மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யாதவர்கள் ஒரு குடும்பத்தில் ஒருவர் வந்தால் போதுமானது. முகாமிற்கு வரும் போது பழைய, புதிய குடும்ப அட்டை, பதிவு செய்ய வருபவரின் ஆதார் அட்டை உள்ளிட்ட தகுந்த ஆவணங்களுடன் பதிவு செய்து முகாம் நடைபெறும் இடத்திலேயே காப்பீட்டு அட்டை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டம் தென்காசி மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், மற்றும் தென்காசி சாந்தி மற்றும் மீரான் ஆகிய தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
The post தென்காசியில் இன்று முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு சிறப்பு பதிவு முகாம் appeared first on Dinakaran.
