×

பீட்ரூட் தரம் பிரிக்கும் பணியில் ஊழியர்கள்

 

ஊட்டி, டிச. 2: பீட்ரூட் தரம் பிரித்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியில் ஊட்டி மார்க்கெட்டில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை அடுத்தபடியாக மழை காய்கறிகள் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பீன்ஸ், முள்ளங்கி, உட்பட பல்வேறு மலைக் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. அதிக அளவு பயிரிடப்படுகிற கேரட் மற்றும் பீட்ரூட் சுவை மிகுந்து காணப்படுவதாலும், நிறத்துடன் காணப்படுவதாலும் இதற்கு மார்க்கெட்டில் அதிக கிராக்கி உள்ளது. இதனால் எப்போதும் இந்த இரு காய்கறிகளுக்கும் விலை சற்று அதிகமாக கிடைக்கும்.

தற்போது நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் பீட்ரூட் கிலோ ஒன்று ரூ.30 முதல் 40 வரை விலை கிடைக்கிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் பீட்ரூட் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் பீட்ரூட் ஊட்டி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஊட்டி மார்க்கெட்டிற்கு அதிகளவு பீட்ரூட் வரத்து உள்ளதால் அதனை தரம்பிரித்து தொழிலாளர்கள் வெளி மாவட்டத்திற்கு அனுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது பீட்ரூட் இருக்கு நல்ல விலை கிடைப்பதால் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் அறுவடைகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

The post பீட்ரூட் தரம் பிரிக்கும் பணியில் ஊழியர்கள் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Dinakaran ,
× RELATED ஊட்டி நகரத்தில் நகராட்சி தற்காலிக கடைகளுக்கு ரூ.6 ஆயிரம் வாடகை நிர்ணயம்