×

திமுக இளைஞரணி கூட்டத்தில் வெண் சீருடையுடன் கொள்ள வேண்டும்

 

திருப்பூர்,டிச.2: திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநகராட்சி 4வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்ட திமுக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் வருகின்ற (3ம் தேதி) காலை 9 மணியளவில் எல்லப்பாளையம் புதூர் ஊராட்சி, என்.காஞ்புரம் கொடுவாயில் நடைபெற உள்ளது.

இதில் திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். விழாவில் கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மகளிர் அணி துணைச்செயலாளர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் கழக இளைஞர் அணி துணைச்செயலாளர்கள் கலந்து கொள்ளகின்றனர்.

அதுசமயம் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற இந்நாள் முன்னாள் உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.கழகத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழகத்தில் உள்ள வாக்குச்சாவடி வாரியாக உள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் வெண் சீருடையுடன் பெருமளவில் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்க வேண்டுமாய் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியிருந்தார்.

The post திமுக இளைஞரணி கூட்டத்தில் வெண் சீருடையுடன் கொள்ள வேண்டும் appeared first on Dinakaran.

Tags : DMK ,Tirupur ,Tirupur South District and ,Corporation 4th Zone ,L. Padmanaban ,Dinakaran ,
× RELATED திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்