×

சாத்தனூர் அணையில் இருந்து 1570 கனஅடி நீர் வெளியேற்றம் பரவலான கனமழை நீடிப்பதால்

திருவண்ணாமலை, டிச.2: பரவலான கனமழை நீடிப்பதால் சாத்தனூர் அணையில் இருந்து தொடர்ந்து 1570 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. அதனால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி, நேற்றும் விட்டு விட்டு பரவலான மழை பெய்தது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆரணியில் 12 மி.மீ மழை பதிவானது. அதேபோல், திருவண்ணாமலையில் 1 மி.மீ, செங்கத்தில் 1.80 மி.மீ, போளூரில் 4 மி.மீ, ஜமுனாமரத்தூரில் 4 மி.மீ, தண்டராம்பட்டில் 6 மி.மீ, கலசபாக்கத்தில் 3.40 மி.மீ, செய்யாறில் 5.50 மி.மீ, கீழ்பென்னாத்தூரில் 7.20 மி.மீ, வெம்பாக்கத்தில் 5 மி.மீ மழை பதிவானது.

அடுத்த சில நாட்களுக்கு கனமழை அல்லது பலத்த காற்றுடன் கூடிய கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 697 பொதுப்பணித்துறை ஏரிகளில் 129 ஏரிகள் முழுமையாக நிரம்பியிருக்கிறது. 60 ஏரிகள் நிரம்பும் நிைலயில் உள்ளன. இந்நிலையில், சாத்தனூர் அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில் நேற்று மாலை நிலவரப்படி 117.15 அடியாக உயர்ந்திருக்கிறது. அணையின் நீர் கொள்ளளவு 6908 மில்லியன் கன அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1825 கன அடி நீர் வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 1570 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக திறக்கப்பட்டுள்ளது. அதனால், தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏறபட்டுள்ளது.

The post சாத்தனூர் அணையில் இருந்து 1570 கனஅடி நீர் வெளியேற்றம் பரவலான கனமழை நீடிப்பதால் appeared first on Dinakaran.

Tags : Chatanur Dam ,Thiruvannamalai ,Dinakaran ,
× RELATED (தி.மலை) சாத்தனூர் அணையில் இருந்து...