×

புரோ கபடி லீக் இன்று தொடக்கம்: 12 அணிகள் பங்கேற்பு

அகமதாபாத்: புரோ கபடி லீக் தொடரின் 10வது சீசன் அகமதாபாத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் – தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. கொரோன பரவல் காரணமாக பெங்களூரில் மட்டும் நடத்தப்பட்டு வந்த புரோ கபடி போட்டி, இப்போது மற்ற நகரங்களிலும் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரின் 10வது சீசன் அகமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் ஜெய்பூர் உள்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் பிப்.21ம் தேதி முடிகிறது. லீக் சுற்றில் வெற்றி பெறும் அணிகளை பொறுத்து பிளே ஆப், அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் நடைபெறும் நாட்கள், இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும். பங்கேற்கும் அணிகள்: பெங்கால் வாரியர்ஸ், பெங்களூர் புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தான், தமிழ் தலைவாஸ், தெலுகு டைட்டன்ஸ், யு மும்பா, யுபி யோதா.

* நகரங்களும் நாட்களும்…
எண் நகரம் தேதி
1 அகமதாபாத் டிச.2 7
2 பெங்களூரு டிச.8 – 13
3 புனே டிச.15 20
4 சென்னை டிச.22 27
5 நொய்டா டிச.29 – ஜன.3
6 மும்பை ஜன.5 – 10
7 ஜெய்பூர் ஜன.12 – 17
8 ஐதராபாத் ஜன.19 24
9 பாட்னா ஜன.26 31
10 டெல்லி பிப்.2 7
11 கொல்கத்தா பிப்.9 14
12 பாஞ்ச்குலா பிப்.16 – 21

* இதுவரை சாம்பியன்கள்
தொடர் சாம்பியன் 2வது இடம்
1 ஜெய்பூர் மும்பை
2 மும்பை பெங்களூரு
3 பாட்னா மும்பை
4 பாட்னா ஜெய்பூர்
5 பாட்னா குஜராத்
6 பெங்களூரு குஜராத்
7 பெங்கால் டெல்லி
8 டெல்லி பாட்னா
9 ஜெய்பூர் புனே

* தமிழ்நாடு வீரர்களும் அணிகளும்…
தமிழ் மண்ணின் பாரம்பரிய விளையாட்டு கபடி என்றாலும், தமிழ்நாட்டு வீரர்களுக்கு புரோ கபடியில் அதிகம் வாய்ப்பு கிடைப்பதில்லை. பெரும்பான்மையான அணிகளில் குறைந்தது ஒரு வீரராவது தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளது போன்று தோன்றும். ஆனால், ஆடும் அணியில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதுதான் கேள்வி. இதில் தமிழ் தலைவாஸ் அணியும் விதிவிலக்கல்ல.
தமிழ் தலைவாஸ்: கே.செல்வமணி, எம்.அபிஷேக், சதீஷ் கண்ணன், மாசானமுத்து லட்சமணன்
தெலுகு டைட்டன்ஸ்: எஸ்.சஞ்சீவி
பெங்களூரு புல்ஸ்: பொன்பார்த்திபன் சுப்ரமணியன், அருளானந்த பாபு, சுந்தர்
யு மும்பா: எம்.கோகுலகண்ணன், வி.விசுவநாத்
புனேரி பல்தன்: அபினேஷ் நடராஜன்,
பாட்னா பைரேட்ஸ்: எம்.சுதாகர், தியாகராஜன் யுவராஜ், சாஜின் சந்திரசேகர்
ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ்: வி.அஜித்குமார்
அரியானா ஸ்டீலர்ஸ்: சந்திரன் ரஞ்சித், கே.பிரபஞ்சன்,
குஜராத் ஜயன்ட்ஸ்: டி.பாலாஜி
பெங்கால் வாரியர்ஸ்: ஆர்.குகன்,

The post புரோ கபடி லீக் இன்று தொடக்கம்: 12 அணிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Pro ,Kabaddi League ,AHMEDABAD ,Kabaddi ,League ,Gujarat ,Dinakaran ,
× RELATED புரோ கபடி தொடர்; லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவு