×

அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு

கரூர், டிச. 1: அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். அக்டோபர் முதல் டிசம்பர் வரை மூன்று மாதங்கள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த காலக்கட்டத்தில் பெய்யும் மழைதான் ஆண்டின் சராசரி மழையளவான 652.20 எட்ட உதவியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் 1ம்தேதி விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும், அதிகாலை நேரத்தில், பனிப்பொழிவு அதிகரிக்கத் துவங்கியுள்ளது. பொதுவாக, வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகுதான் பனி பெய்யும். ஆனால், வடகிழக்கு பருவமழை சீசனிலேயே பனிப் பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழையின் காலம் ஒரு மாதமே உள்ள நிலையில், இனி வரும் நாட்களில் மழை பெய்யுமா? என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும், அதிகாலை 4மணி முதல் 6மணி வரை பனியின் தாக்கம் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகள், முதியோர்கள், வேலைக்கு செல்லும் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, புயல் சின்னம் உருவாகி மழை வரும் பட்சத்தில்தான் பனியின் தாக்கம் குறையும் என்பதால் அனைத்து தரப்பினர்களும் மழையை எதிர்நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு appeared first on Dinakaran.

Tags : Karur ,Dinakaran ,
× RELATED குட்காவை பதுக்கி வைத்து விற்க முயன்றவர் மீது வழக்கு