×

தமிழகம் முழுவதும் அடுக்குமாடி பதிவு கட்டணம் குறைப்பு இன்று முதல் அமல்

சென்னை: தமிழகத்தில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை மொத்த மதிப்பில் பதிவு செய்ய வேண்டும். கட்டுமானப் பணிகள் நடைபெறும் குடியிருப்பாக இருந்தால், பிரிக்கப்படாத பாகம் மற்றும் கட்டுமான ஒப்பந்தத்தை தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. குடியிருப்பு வாங்கும் பொதுமக்கள் வசதிக்காக பிரிக்கப்படாத பாக மனை நிலம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஆகிய இரண்டுக்குமான மொத்த மதிப்பினைக் கணக்கிட்டு ₹50 லட்சம் வரை மதிப்பு கொண்ட குடியிருப்புகளுக்கு முத்திரைத் தீர்வை 4 சதவீதம், பதிவுக் கட்டணம் 2 சதவீதம் செலுத்தி பதிவு செய்யலாம்.

ரூ.50 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை மதிப்பு கொண்ட குடியிருப்புகளுக்கு 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் மற்றும் ரூ.3 கோடிக்கு மேலான மதிப்பு கொண்ட குடியிருப்புகளுக்கு 7 சதவீதம் முத்திரைத்தீர்வை, 2 சதவீதம் பதிவுக்கட்டணம் என ஏற்கெனவே உள்ள நடைமுறையில் செலுத்தி பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை இன்று முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது.

The post தமிழகம் முழுவதும் அடுக்குமாடி பதிவு கட்டணம் குறைப்பு இன்று முதல் அமல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சுய சான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட...