×

ஏழுமலையான் கோயிலில் புதுப்பெண் மயங்கி விழுந்து பலி

திருமலை: ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டா நகரைச் சேர்ந்த கொப்புரௌரி ரமேஷ் வியாபாரி. இவரது மனைவி சுதா. இந்த தம்பதியினருடைய மகள் லட்சுமி சந்தோஷி(20). இவருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த பார்கவுடன் கடந்த 23ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 27ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய திருப்பதி வந்தனர்.

28ம் தேதி காலை சுவாமி தரிசனம் செய்து வெளியே வந்த கோயில் எதிரே உள்ள நாத நீரஞனம் மேடை அருகே அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் மணமகள் லட்சுமி சந்தோஷிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவர் பார்கவ் மீது மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்சில் திருமலை அஸ்வினி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே இறந்தார். இவரது சடலம் நேற்று முன்தினம் தேவஸ்தான ஆம்புலன்சில் நரச ராவ்பேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது.

The post ஏழுமலையான் கோயிலில் புதுப்பெண் மயங்கி விழுந்து பலி appeared first on Dinakaran.

Tags : Etummalaiyan ,Tirumala ,Koppurauri Ramesh ,Vinukonda ,Balnadu district ,Andhra Pradesh ,Sudha ,Eyumalayan temple ,
× RELATED திருப்பதி தேவஸ்தானம் பங்களிப்பில் இலங்கையில் ஏழுமலையான் கோயில்