×

ஊட்டியில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம்

 

ஊட்டி, டிச. 1: ஊட்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு பகுதிகளிலும் அதிகாலை, மாலை நேரங்களில் பனி மூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் வேலிவியூ, ஊட்டி-மஞ்சூர் சாலையில் காந்திப்போட்டை போன்ற பகுதிகளில் பனி மூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இதனால், குளிரின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. பனிமூட்டத்திற்கிடையே வாகன ஓட்டிகள் வாகனங்களை முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றன. மழை குறைந்தால் ஓரிரு நாட்களில் உறைப்பனி விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. உறைப்பனி அடுத்த 3 மாதங்களுக்கு நீடிக்கும். உறைப்பனி விழத்துவங்கினால் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாள் தோறும் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பனி மூட்டம் அதிகம் காணப்படுவது மட்டுமின்றி, குளிரின் தாக்கமும் அதிகம் காணப்படும்.

The post ஊட்டியில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Dinakaran ,
× RELATED கோடை சீசனுக்காக மரவியல் பூங்காவில்...