×

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

 

கோத்தகிரி,டிச.1:கோத்தகிரி பெரியார் நகர் பகுதியில் இரவு குட்டிகளுடன் கரடி உலா வந்த பகுதியில் சிறுத்தை உலா வந்தால் குடியிருப்பு வாசிகள் பீதி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை மற்றும் கரடிகள் சர்வ சாதாரணமாக உலா வருவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் அடிக்கடி குட்டிகளுடன் இந்தப் பகுதியில் கரடி உலா வந்த வண்ணம் இருந்த நிலையில் நேற்றுமுன்தினம் சிறுத்தை உலா வந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி குடியிருப்பு வாசிகள் மற்றும் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இரவு நேரங்களில் வனவிலங்குகள் தொடர்ந்து குடியிருப்புகள் அருகே நடமாடி வருவது அச்சமடைய செய்துள்ளதால்,இரவு நேர ரோந்து பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் appeared first on Dinakaran.

Tags : Leopard ,Kotagiri ,Kotagiri Periyar Nagar ,Dinakaran ,
× RELATED கால தாமதம் செய்யாமல் பாதை வசதி ஏற்படுத்தி தரக்கோரி மக்கள் மனு