×

காங்கயம் அருகே திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம்

 

காங்கயம், டிச.1: காங்கயம் அருகே நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்திற்கான பந்தல், மேடை அமைக்கும் பணியை அமைச்சர், மாவட்ட செயலாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருப்பூர் மாவட்ட இளைஞரணி செயல்வீரர் கூட்டம் வரும் 3ம் தேதி காங்கயம் அருகே எல்லப்பாளையம்புதூர் ஊராட்சி, கொடுவாய் அருகே விவேகானந்த பள்ளி அருகில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திருப்பூர் வடக்கு, தெற்கு அவனாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம் மடத்துக்குளம் உடுமலைப்பேட்டை ஆகிய தொகுதியில் உள்ள இளைஞரணி செயல் வீரர்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இளைஞர் அணி நிர்வாகிகளுடன் பேச உள்ளார். இதற்காக மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை நேற்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட செயலாளரும், மாநகராட்சி 4வது மண்டலக் குழு தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர். இதில் குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் மற்றும் இளைஞர் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

The post காங்கயம் அருகே திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Kangayam ,Dinakaran ,
× RELATED சின்னமலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஏக்கர் புற்கள் எரிந்து நாசம்