×

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் வட்டார அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம்

 

அவிநாசி, டிச.1: அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடர்பான வட்டார அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் ஒன்றிய ஆணையாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர்கள் மகேசுவரி, திருநாவுக்கரசு, அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடக்கப்பள்ளிகளில் இன்று முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மானவ,மாணவிகளுக்கு காலை 8.30 மணிக்குள் குறித்த நேரத்தில் உனவு பரிமாற வேண்டும் எனவும், இதை ஆய்வு செய்து, அனைத்து நிலை அலுவலர்களும் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அவிநாசிக்குட்பட்ட அனைத்து மையங்களிலும், சுத்தமான முறையிலும், சுகாதாரமான முறையிலும், முதலமைச்சரின் காலை உணவு வழங்குவது குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

மேலும், பதிவேடுகள் பராமரிப்பு குறித்தும், பதிவேடுகள் பராமரிப்பு மொபைல் செயலியில் குறித்த நேரத்தில் பதிவுசெய்வது குறித்தும், உணவுபாதுகாப்பு குறித்தும், அறிவுரைகள் வழங்கப்பட்டன.கூட்டத்தில், தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி (பொது), செல்வராஜ் (சத்துணவுத்திட்டம்), மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பவுலின் ஆரோக்கியராஜ், ஆனந்தன், நவமணி, மங்கயற்கரசி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பவுலின் ஆரோக்கியராஜ், ஆனந்தன், நவமணி, மங்கயற்கரசி, காலை உணவுத்திட்ட மேலாளர் பழனியம்மாள், வடுகபாளையம் பள்ளித் தலைமை ஆசிரியர் ரமேஷ் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.

The post முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் வட்டார அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : District Level Monitoring Committee ,Minister ,Avinasi ,Avinasi Panchayat Union ,Scheme ,Dinakaran ,
× RELATED அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விரைவில்...