×

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் வினாடி வினா நிகழ்ச்சி: கனிமொழி எம்பி பங்கேற்கிறார்

அருப்புக்கோட்டை, நவ.30: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் இன்று வினாடி வினா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கனிமொழி எம்பி பங்கேற்கிறார். விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வினாடி வினா நிகழ்ச்சி அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின் முறை டிரஸ்ட் திருமண மஹாலில் இன்று காலை 10 மணியளவில் நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு திமுக துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமை வகிக்கிறார்.

எனவே இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொண்டர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன், விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தங்கம் தென்னரசு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் வினாடி வினா நிகழ்ச்சி: கனிமொழி எம்பி பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Tags : Aruppukkottai ,Kanimozhi ,Kanimozhi MP ,
× RELATED பாஜவின் வெற்றி, இந்த நாட்டின் தோல்வி...