×

ஸ்வைப்பிங் இயந்திரம் வழங்கல் 20வது புத்தக திருவிழா ஆலோசனை கூட்டம்

திருப்பூர், நவ. 30: தமிழக அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் ஆகியவை சார்பில், 20வது புத்தக திருவிழா வருகிற ஜனவரி மாதம் 25ம் தேதி முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை காங்கயம் ரோட்டில் உள்ள வேலன் ஓட்டலில் நடத்த அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று புத்தக திருவிழாவின் ஆலோசனை கூட்டம் கேஆர்சி சிட்டி சென்டரில் நடந்தது. இதில் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் ஈஸ்வரன் மற்றும் நிசார் ஆகியோர் கலந்துகொண்டு புத்தக திருவிழா குறித்து விளக்கி பேசினர்.

இதில் கிட்ஸ் கிளப் நிறுவனங்கள் இயக்குனர் மோகன் கார்த்திக், எம்பெரர் பொன்னுச்சாமி மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். இதில் 20வது ஆண்டு புத்தக திருவிழாவை சிறப்பாக நடத்துவது, அரங்குகள் அமைப்பது என்பது உள்பட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

The post ஸ்வைப்பிங் இயந்திரம் வழங்கல் 20வது புத்தக திருவிழா ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : 20th Book Festival Advisory Meeting ,Tirupur ,Tamil Nadu Government ,Tirupur District Administration ,Tirupur Pinnal Book Trust ,20th Book Festival ,Dinakaran ,
× RELATED திருமூர்த்தி குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு