×

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிச.2ல் ஊட்டி வருகை

ஊட்டி, நவ.30: டிசம்பர் 2ம் தேதி திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஊட்டி வரும் நிலையில், விழாவில் 5 ஆயிரம் இளைஞர்கள் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை தாங்கினார். தேர்தல் பணி செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் வரவேற்றார்.

கூட்டத்தில் வரும் டிசம்பர் 2ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் மாவட்ட திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். அமைச்சராக பொறுப்பேற்று முதல்முறையாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்தும், இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை வெண் சீருடையில் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர்கள் ரவிகுமார், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, காசிலிங்கம், திராவிடமணி, எக்ஸ்போ செந்தில், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, நகர செயலாளர்கள் ராமசாமி, ஜார்ஜ், இளஞ்செழியன், சேகரன், ஒன்றிய செயலாளர்கள் லியாகத் அலி, பரமசிவன், லாரன்ஸ், காமராஜ், நெல்லை கண்ணன், சிவானந்தராஜா, பிரேம்குமார், பீமன், சுஜேஷ் மற்றும் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிச.2ல் ஊட்டி வருகை appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Ooty ,DMK ,Youth Secretary ,Udhayanidhi Stalin ,
× RELATED விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை...