×

பிங்கர்போஸ்ட்-குளிச்சோலை சாலை சீரமைப்பு பணி

ஊட்டி, நவ. 30: பிங்கர்போஸ்ட் பகுதியில் இருந்து குளிச்சோலை செல்லும் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். அதேபோல், பல்வேறு தேவைகளுக்காக கிராமப்புறங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் ஊட்டி நகருக்கு வந்துச் செல்கின்றனர். ஆனால், ஊட்டி நகரை இணைக்கும் பெரும்பாலான சாலைகள் மற்றும் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான சாலைகள் சீரமைக்கப்படாமல் இருந்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

எனவே, ஊட்டி நகரில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அந்தந்த பகுதியில் உள்ள வார்டு கவுன்சிலர்கள் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது ஊட்டி நகராட்சி நிர்வாகம் நகரில் உள்ள பெரும்பாலான சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பிங்கர்போஸ்ட் பகுதியில் இருந்து குளிச்சோலை செல்லும் சாலை தற்போது சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

The post பிங்கர்போஸ்ட்-குளிச்சோலை சாலை சீரமைப்பு பணி appeared first on Dinakaran.

Tags : Pinkerpost ,Kulicholai ,Ooty ,Dinakaran ,
× RELATED கோடை சீசனுக்காக மரவியல் பூங்காவில்...