×

காசா போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க மத்தியஸ்த நாடுகள் முயற்சி

ஜெருசலேம்: இஸ்ரேல்-ஹமாஸ் படையினர் இடையேயான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில், ஹமாஸ் படை 69 பணயக் கைதிகளையும் இஸ்ரேல் 150 பாலஸ்தீனர்களை விடுவித்துள்ளன. இந்த போர் நிறுத்தம் 2-வது கட்டமாக மேலும் 2 நாள் நீட்டிக்கப்பட்டு, நேற்றுடன் முடிந்தது. இதில் ஹமாஸ் படை 2 வெளிநாட்டினர் உள்பட 12 பணயக் கைதிகளை நேற்று முன்தினம் விடுவித்தது. ஆனால் இஸ்ரேல் 30 பாலஸ்தீன சிறைக்கைதிகளை மட்டுமே விடுவித்திருந்தது.

இந்நிலையில், ஹமாஸ் பிடியில் உள்ள மேலும் சில பணயக்கைதிகளை விடுவிக்கும் நோக்கத்தில், காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை 3வது முறையாக நீட்டிக்க மத்தியஸ்தம் செய்த நாடுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. இதற்கு ஹமாஸ் படை எதிர்ப்பு ஒன்றும் தெரிவித்தாக தெரியவில்லை.

The post காசா போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க மத்தியஸ்த நாடுகள் முயற்சி appeared first on Dinakaran.

Tags : Gaza ,Jerusalem ,Israel ,Hamas ,Dinakaran ,
× RELATED காசாவில் போரினால் மின்சாரம் இல்லாமல்...