×

பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல இயக்கம்: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

சென்னை: அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் மேற்கூரை பராமரிப்பு பணிகள் முடிந்து, பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பலத்த காற்றின் காரணமாக அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தின் மேற்கூரையில் பாதிப்பு ஏற்பட்டது.

இதனை மெட்ரோ இரயில் ஊழியர்கள் சரிசெய்தனர். தற்போது இரண்டு வழித்தடத்திலும் மெட்ரோ இரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ இரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத திடீர் தடங்கல்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வருந்துகிறது.

The post பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல இயக்கம்: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Metro Rail ,Metro Rail Corporation ,CHENNAI ,Arumbakkam Metro Railway Station ,Metro Rail Company ,Dinakaran ,
× RELATED பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி...