×

மாணவிகள் சாதனை படைக்க வேண்டும்

*அமைச்சர் ரோஜா பேச்சு

திருமலை : திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் சாதனை படைக்க வேண்டும் என்று அமைச்சர் ரோஜா பேசினார்.திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வரும் பத்மாவதி மகிளா டிகிரி, பிஜி கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கல்லூரி முன்னாள் மாணவியும், அமைச்சருமான ரோஜா மாணவர்களிடையே பேசியதாவது:

இந்த கல்லூரி கடவுளின் கல்லூரி. இதில் படிப்பது மாணவர்களுக்கு கிடைத்த பாக்கியம். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது ஆசிரியர்களை மீண்டும் கல்லூரியில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். மாநில அரசு பெண் கல்வியை ஊக்குவித்து வருகிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி உயர்நிலைகளை அடைய வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு இலக்கை நிர்ணயித்து அதை அடைய கடினமாக உழைக்க வேண்டும். விரும்பிய நிலையை அடைந்து பெற்றோர்கள், கல்லூரி மற்றும் ஆசிரியர்களுக்கு நற்பெயரை கொண்டு வர வேண்டும். மாணவர்கள் எந்த பயமும் இன்றி தைரியமாக முன்னேறி தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் சிறந்து விளங்கி சாதனை படைக்க வேண்டும். நான் இந்த நிலைக்கு வர உதவிய கல்லூரி ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இவ்வாறு, அவர் பேசினார்.

The post மாணவிகள் சாதனை படைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Minister Roja Pachu Tirumalai ,Tirupati ,Minister ,Roja ,
× RELATED திருப்பதி உயிரியல் பூங்காவில் செல்பி...