×

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

சேலம், நவ.29:சேலம் பட்டைகோயில் ஜலால்புரம் பகுதியை சேர்ந்தவர் யாசின்கான் (32), ஆட்டோ டிரைவர். இவர், கடந்த 25ம் தேதி தனது ஆட்டோவில் ஓமலூரில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக பிரியாணி ஏற்றிக்கொண்டு சென்றார். மாமாங்கம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, அவ்வழியே சென்ற ஒரு லாரி, ஆட்டோவின் மீது உரசியபடி சென்றது. இதில், ஆட்டோ சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிரைவர் யாசின்கானுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

The post ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Salem ,Yasin Khan ,Jalalpuram ,Salem Pattakoil ,
× RELATED பட்டாசு விபத்தில் கருகிய வாலிபர் பலி