×

6 பேருடன் டும்..டும்.. கல்யாண ராணி கைது

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் அடுத்தடுத்து 4 பேரை திருமணம் செய்த நிலையில், அவர்களை விட்டுவிட்டு பேரணாம்பட்டை சேர்ந்த ராணுவ வீரரை 5வதாக திருமணம் செய்துள்ளார். அவருடன் வசித்து வந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறினார். பலரிடமும் அந்த பெண் சுமார் ₹10 லட்சம் வரை கடன் வாங்கி இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று குடியாத்தம் நேதாஜி சிலை சந்திப்பில் பைக்கில் வாலிபர் ஒருவருடன் இளம்பெண்ைண மடக்கி பிடித்து இருவரையும் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது இளம்பெண் 6 பேரை திருமணம் செய்திருப்பதை அறிந்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கடன் கொடுத்து ஏமாந்தவர்கள் உரிய புகார் அளித்தால், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.

The post 6 பேருடன் டும்..டும்.. கல்யாண ராணி கைது appeared first on Dinakaran.

Tags : Kalyana Rani ,Kudiatham ,Agraharam ,Vellore district ,Dinakaran ,
× RELATED குடியாத்தத்தில் அரிய தாவரவியல்...