×

இளம் கவிஞர் விருது போட்டியில் வென்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

 

உடுமலை, நவ.29: திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த வாரம் 2023-2024ம் ஆண்டிற்கான இளம் கவிஞர் விருதுக்கான மாவட்ட அளவிலான கவிதை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், திருப்பூர் மாவட்டத்தைச சேர்ந்த 10, 11, 12ம் வகுப்பு சார்ந்த மாணவர்கள் வட்டாரத்திற்கு மூன்று பேர் வீதம் கலந்து கொண்டனர். இப்போட்டியில் உடுமலை வட்டார அளவில் கலந்து கொண்ட பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 12ம் வகுப்பு மாணவி ச.எபிரோனியா நிஷா முதலிடம் பிடித்தார்.

இவர் வருகின்ற 30ம் தேதி சென்னை எழும்பூரில் நடைபெறும் மாநில அளவிலான கவிதை போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். மாவட்ட அளவிலான இளம் கவிஞர் விருதுக்கான கவிதை போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி எபிரோனியா நிஷாவை பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா, உதவி தலைமை ஆசிரியர் ஜெயராஜ், மஞ்சுளா மற்றும் தமிழ் ஆசிரியர்கள் சின்னராசு, ராஜேந்திரன், சிவசுந்தரி, கார்த்திகா பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.

The post இளம் கவிஞர் விருது போட்டியில் வென்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Tirupur Jayavabai ,Municipal Girls Higher Secondary School ,Dinakaran ,
× RELATED பைக் சாகசம் செய்து...