×

திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

 

திருப்பூர், நவ.29: நாடாளுமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, வேலம்பாளையம் பகுதிக்கு உட்பட்ட திமுக வட்ட செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் அனுப்பர்பாளையம் புதூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, திமுக பகுதி செயலாளர் கொ.ராமதாஸ் தலைமை வகித்தார். பகுதி அவை தலைவர் குழந்தைவேல் முன்னிலை வகித்தார். திமுக வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், மாநில இலக்கிய அணி துணை செயலாளரும், திருப்பூர் வடக்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான திராவிட மணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வருகின்ற டிசம்பர் 3ம் தேதி திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியில் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்திலும், டிசம்பர் 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள இரண்டாவது இளைஞர் அணி மாநில உரிமை மீட்பு மாநாட்டிலும் திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதில், வடக்கு மாநகர அவை தலைவர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் வட்ட கழக செயலாளர்கள், வேலம்பாளையம் பகுதி கழக நிர்வாகிகளும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Tirupur ,Velampalayam ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர் பிறந்தநாளை மாதம்...