×

கோத்தகிரியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்

 

கோத்தகிரி,நவ.26: கோத்தகிரி,கீழ் கோத்தகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல்,நீக்குதல் மற்றும் பெயர்,முகவரி மாற்றம் சிறப்பு முகாம் நடைபெற்றது. கோத்தகிரி மற்றும் கீழ் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கோத்தகிரி மற்றும் கீழ் கோத்தகிரி பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் பெயர்,முகவரி மாற்றம் குறித்த சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

இம்முகாமானது கோத்தகிரி வருவாய் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.இதில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் மூலம் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்குதல் மற்றும் பெயர், முகவரி மாற்றம் தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றது.இம்முகாமானது கீழ் கோத்தகிரி ஒன்றியத்தில் உள்ள எஸ்.கைக்காட்டி அரசு பள்ளியில் நடைபெற்ற நிலையில் கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் காவிலோரை பீமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது கீழ் கோத்தகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுண்டட்டி முருகன், சுரேஷ், அமிர்தலிங்கம், திருச்செல்வம்,சிவசங்கரன், கணேஷ்,டெய்லர் ராஜூ, டெய்லர் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post கோத்தகிரியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Lower Kotagiri ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி