கரூர், நவ. 24: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ. 10 லட்சத்தை வாங்கி மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கரூர் தொழிற்பேட்டையை சேர்ந்தவர் பாரதி(34). இவர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் கடந்த 22ம் தேதி அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது: மின்வாரியத்தில் பணியாற்றி வருவதாக கூறி கரூர் அண்ணாநகரைச் சேர்ந்த ரவி ரவி என்பவர் தன்னிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்தார். மேலும் முசிறியை சேர்ந்த பாலசுப்ரமணியன் மற்றும் திருச்சியை சேர்ந்த சஞ்சீவி ஆகிய இருவரும் தனது உறவினர்கள் என அறிமுகப்படுத்தினார்.
அவர்களும் நிச்சயம் அரசு வேலை வாங்கிக் கொடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை நம்பி அவர்களிடம் கடந்த 2019ம் ஆண்டு ரூ. 10 லட்சம் பணம் கொடுத்தேன். ஆனால் சொன்னபடி வேலையும் வாங்கித் தரவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை என தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பசுபதிபாளையம் போலீசார் பாலசுப்ரமணியன், சஞ்சீவி, ரவி ஆகிய மூன்று பேர்கள் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி appeared first on Dinakaran.
